சிவகிரி வேலாதயுத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிவகிரி பகுதியில் உள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி கோயில் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கோயிலில் கிராம சாந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் முன் உள்ள கொடித் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதிஉலா செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை( மே 11) நடைபெற உள்ளன.
திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் திங்கள்கிழமை( மே 12) நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்