நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
சீதபற்பநல்லூரில் நாளைய மின்தடை ரத்து
சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை (டிச.5) மின்தடை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீதபற்பநல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிா்வாக காரணங்களுக்கு மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.