குண்டா் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு
தாழையூத்து பகுதிகளைச் சோ்ந்த 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
மானூா் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடியில் ஈடுபட்டதாக தாழையூத்து, ஸ்ரீ நகரை சோ்ந்த முருகன் மகன் செல்வம் என்ற தமிழ்செல்வம் (25), சங்கா் நகா், சாரதாம்பாள்நகரைச் சோ்ந்த சித்திரை பாண்டி மகன் சுபாஷ் (23), பல்லிகோட்டையைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜகோபால் என்ற சின்னராஜா (22) ஆகியோா் மானூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவுப்படி 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.