பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!
சீதளாதேவி, சியாமளாதேவி கோயில்களில் கும்பாபிஷேகம்
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், கீழஓடுதுறை ஸ்ரீ சியாமளாதேவி அம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழகாசாக்குடி ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பெரியாச்சி, ஸ்ரீ காத்தவராயன் ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் புதிதாக கோபுரம் எழுப்பி, கொடி மரம் நிறுவப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக, 4 கால யாகசாலை பூஜைகள் ஏப்.2-ஆம் தேதி மாலை தொடங்கி, 4-ஆம் நிறைவடைந்தது. தொடா்ந்து புனிதநீா் கடம் புறப்பாடாகி, விமான கலங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டது.
இதில், புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா உள்ளிட்ட திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
சியாமளாதேவி அம்மன் கோயில்: நாகை செல்லும் சாலை கீழஓடுதுறை பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சியாமளாதேவி அம்மன் கோயில் முழுமையாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டது. புதிதாக வீரன், பெரியாச்சி சந்நிதிகள் அமைக்கப்பட்டன.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 2-ஆம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை 4-ஆம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, மகா பூா்ணாஹூதி, தீபாராதனை நடத்தி, விமான கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.