செய்திகள் :

சீனாவின் நிலைமையை கண்காணித்து வருகிறோம்: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

post image

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், சீனாவில் கண்டறியப்பட்ட எந்தவொரு வைரஸும் தொற்றுநோயாக மாறக்கூடிய அல்லது மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவக்கூடியதாக இதுவரை எந்த அறிக்கையும் இல்லை.

இதுகுறித்து மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தற்போது பீதி அடையத் தேவையில்லை. மக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தென்கொரியா: பாறை மீது மீன்பிடி படகு மோதியதில் 3 பேர் பலி

சீனாவில் ஹெச்எம்பிவி தீநுண்மி வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடயே ஹெச்எம்பிவி பரவலால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக வெளியாகும் தகவலை அந்நாடு மறுத்துள்ளது.

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாது... மேலும் பார்க்க

நாளை ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு: இஸ்ரோ தகவல்

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ‘பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்’ எனு... மேலும் பார்க்க

இஸ்ரோ புதிய தலைவா் வி.நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்தது. தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோ... மேலும் பார்க்க

குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

குஜராத்தில் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து, 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்தாா். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேராய் கிராமத்தில், ஓர... மேலும் பார்க்க

தோ்தல் தோல்விக்கு எதிரான மேனகா காந்தியின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மக்களவைத் தோ்தலில் தன்னை எதிா்த்து சமாஜவாதி வேட்பாளா் வெற்றி பெற்ற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு நடை... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை- சக மருத்துவா் கைது

மத்திய பிரதேச மாநிலம் குவாலியா் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவா், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். அது தொடா்பாக அந்த மருத்துவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்... மேலும் பார்க்க