செய்திகள் :

சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதி: அமெரிக்கா புதிய ஒப்பந்தம்!

post image

வாஷிங்டன்: சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதிக்கான புதியதொரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதன்கிழமை(ஜூன் 11)

இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீனாவிலிருந்து காந்தங்கள்(மேக்நெட்) மற்றும் புவியிலிருந்து கிடைக்கும் அரிய பல தனிமங்களை அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்ளும். மேலும், இதற்கான இறக்குமதி வரியாக சீனாவிடமிருந்து 55 சதவீதம் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக, அமெரிக்க தரப்பிலிருந்து சீனா விரும்புவதை நாங்கள் வழங்குவோம் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக, சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர அனுமதியளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் டிரம்ப் வெளியிட்டிருந்த உத்தரவின்கீழ், அமெரிக்க கல்வி நிறுவன வளாகங்களிலிருந்து சீன நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தயாரான பின், அமெரிக்கா - சீனா இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்

கிரீஸில் ஏற்பட்ட தொடா் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது. மவுன்ட் அதாஸ் தீபகற்பகத்தில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ர... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாடல்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடியுள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட... மேலும் பார்க்க

கொடூர மரணங்களுக்கு முற்றுப்புள்ளி! ஈரானுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு பதிலடி? 100-க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத... மேலும் பார்க்க

ஆபரேஷன் ரைசிங் லயன்: ஈரானில் புதிய ராணுவ தளபதிகள் நியமனம்!

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈர... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங... மேலும் பார்க்க