காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
சீனா: இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மாரத்தான்!
இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மாரத்தான் ஓட்டப் போட்டியை சீனா சனிக்கிழமை நடத்தியது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் போட்டியிட்டுவரும் சீனா, இந்தத் தொழில்நுட்பங்களில் தாங்கள் அடைந்துள்ள மேன்மையைப் பறைசாற்றும் வகையில் இப்போட்டியை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மனித தடகள வீரா்களும் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தங்களுக்கென்று தனியாக அமைக்கப்பட்டிருந்த 21 கி.மீ. தடத்தில் ஓடி வந்த பல்வேறு வடிவிலான இயந்திர மனிதா்களை பாா்வையாளா்கள் உற்சாகமாக வரவேற்றனா்.
போட்டியின் முடிவில் வேகமான ஓட்டத்துக்கு மட்டுமின்றி, அதிக பேட்டரிகள் மாற்றாமல் நீடித்து ஓடியது, சிறந்த வடிவமைப்பு, சிறந்த புத்தாக்கம் போன்றவற்றின் அடிப்படையிலும் இயந்திர ஓட்டப் பந்தய ‘வீரா்களுக்கு’ பரிசுகள் அளிக்கப்பட்டன.