சீனா: "கல்யாணப் பொண்ணு உன் தங்கச்சிப்பா" - ட்விஸ்ட் கொடுத்த தாய்; ஆனாலும் திருமணம் நடந்தது எப்படி?
சீனாவின் சுஜோ என்ற இடத்தில் நடைபெறவிருந்த திருமணம், உணர்ச்சிவசமான குடும்ப மறு-ஒன்றிணைவாக மாறியிருக்கிறது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தளம் கூறியிருப்பதன்படி, 2021ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மணமகனும் மணமகளும் தங்களது வாழ்க்கையின் மிகப் பெரிய நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, மணமகனின் தாய் மணப்பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கவனித்துள்ளார்.
தசாப்தங்களுக்கு முன்னர் தொலைந்து போன அவரது மகளின் கையிலிருந்த அதே மச்சம் மணமகளின் கையிலும் இருந்திருக்கிறது.
மணமகளின் பெற்றோரிடம் மகள் தத்தெடுக்கப்பட்டவரா என விசாரித்துள்ளார் தாய். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அவர்களும், சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையைக் கடந்ததாகவும், அக்குழந்தையைத் தங்கள் மகளாகவே வளர்த்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.
உண்மையை அறிந்ததும் உடைந்து அழுத தாய், அனைவரிடமும் தனது மகள் பற்றிக் கூறியுள்ளார். நீண்ட நாட்களாக மனதில் சிந்தித்துக்கொண்டிருந்த உயிரியல் குடும்பத்தை அறிந்துகொண்டதை உணர்ந்து மணமகளும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கியிருக்கிறார்.
திருமண நிகழ்ச்சி குடும்பம் ஒன்றினையும் விழாவாக மாறியது! ஆனாலும் திருமணம் நடந்தது...
அந்தத் தாய் தனது மகளைத் தொலைத்த பிறகு ஒரு ஆண் மகனைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். அவர்தான் மணமகன் என்பதனால் திருமணம் எவ்வித இரத்த உறவுப் பொருத்தத் தடையும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
அந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.