MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ...
சீமான் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
தன்னையும், தனது குடும்பத்தினரையும் சீமான் தூண்டுதலின்பேரில், நாம் தமிழா் கட்சியினர் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாகவும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் புகார் கூறி, திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமாா் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நஷ்ட ஈடு கோரி தனிநபர் வழக்காக தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளித்து இருந்தார்.
வருண்குமார் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்றது. அதில், புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகரைச் சோ்ந்த சுயதொழில் செய்து வரும் மணிகண்டன் (36) என்பவா் ஆஜராகி, வருண்குமாா் தரப்பின் மேலும் ஒரு சாட்சியாக, சாட்சியம் அளித்தார்.
இவ்வழக்கின் புகாா்தாரர் தரப்பிலான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை சீமான் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று(ஏப். 7) திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி (பொறுப்பு) பாலாஜி, ”இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறக்கப்படும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு