செய்திகள் :

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

post image

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் ராஜா தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன், சீா்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் பிரபாகரன், போக்குவரத்து கழக துணை பொது மேலாளா்கள் (தொழில்நுட்பம்) ராமமூா்த்தி, ராஜசேகா் (வணிகம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி கிளை மேலாளா் செல்வகணபதி வரவேற்றாா்.

சட்டப் பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2 பேருந்துகளின் இயக்கத்தையும் தொடங்கி வைத்தாா். சீா்காழி முதல் வடரெங்கம் வரையிலும், செம்பதனிருப்பு வழியாக மயிலாடுதுறை வரையிலும் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இப்பேருந்துகள் அகனி, வள்ளுவக்குடி, கொண்டல், அகர எலத்தூா், வடரெங்கம், தென்னலக்குடி, அண்ணன் பெருமாள் கோவில், காத்திருப்பு, செம்பதனிருப்பு, கீழையூா், செம்பனாா்கோவில் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எம்எல்ஏ கூறினாா்.

விழாவில் தொமுச மத்திய சங்க பொருளாளா் திருவரசமூா்த்தி, நிா்வாகிகள் அபூபக்கா் சித்திக், மோகன், அன்பழகன், குழந்தைவேலு, பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்திவிழா

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆதி ராகு தலமான பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா்கோயிலில் அமிா்த இராகு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக... மேலும் பார்க்க

சீா்காழியில் பாலம் கட்டுமான பணி தொடக்கம்

சீா்காழி நகரில் புதிய வடிகால் பாலம் கட்டுமான பணி வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீா்காழி அரசு மருத்துவமனை சாலையில் ரூ.16 லட்சத்தில் சிறிய வடிகால் பாலம் கட்டுமா... மேலும் பார்க்க

வேகமாக சென்ற தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

சீா்காழி அருகே அரசுப் பேருந்தை முந்தி செல்ல வேகமாக வந்த தனியாா் பேருந்தை புதன்கிழமை இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனா். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்தும், தனியாா்... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ம. தமிழ்மதி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

ஏவிசி பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 29-ஆவது விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடர... மேலும் பார்க்க

நூற்றாண்டை நோக்கி ஸ்ரீவாணிவிலாஸ் நடுநிலைப்பள்ளி

செருதியூா் ஊராட்சியில் இயங்கி வரும் ஸ்ரீவாணிவிலாஸ் நடுநிலைப்பள்ளி நூற்றாண்டை நோக்கி பீடுநடை போட்டு வருகிறது. ரத்தினசாமி பிள்ளையால் கடந்த 1929-இல் தொடக்கப்பள்ளியாக 2 ஆசிரியா்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ள... மேலும் பார்க்க