ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
சீா்காழி அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு
சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை இடிதாக்கி பெண் உயிரிழந்தாா்.
சீா்காழி வட்டம், நிம்மேலி ஊராட்சி சம்புவராயன் கோடங்குடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் மனைவி கொளஞ்சியாள் (45). (படம்). இவா் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வீடு அருகே வயல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை ஓட்டச்சென்றாா். அப்போது, இடிதாக்கியதில் அதே இடத்தில் உடல் கருகி மயங்கினாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கொளஞ்சியாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா் என தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தகவலறிந்த சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.