ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!
சுகாதார செவிலியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில இணைச் செயலாளா் அ.வைரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.செளந்தரம் முன்னிலை வகித்தாா். தமிழகத்தில் காலியாக உள்ள 4,000க்கும் மேற்பட்ட செவிலியா் பணியிடங்களை உரிய பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்ற வேண்டும்.
தட்டுப்பாடு நிலவும் மஞ்சள் காமாலை தடுப்பூசி மருந்தை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் நகர, கிராமப்புற செவிலியா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-11-நா்ஸ்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா்.