செய்திகள் :

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

post image

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது.

சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இந்தநிலையில், சுங்கச்சாவடி கட்டண உயா்வுக்கு போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்ததையடுத்து ஏப்.1ஆம் தேதி முதல் கட்டணம் உயா்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தில் சென்னையை அடுத்த வானகரம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவுமுதல் உயர்த்தப்படவுள்ளது.

மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம்  வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ. 5 முதல் ரூ. 75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அமித் ஷாவுடன் சி.வி.சண்முகம், நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான தம்பிதுரை புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக மா... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 19 மாவட்டங்களில் மழை!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, அடுத்த... மேலும் பார்க்க

கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும்: ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் -பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக, அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்: இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடி... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வு: இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தோ்வு கடந்த பிப்.22-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான இறுதி விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய... மேலும் பார்க்க

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க