செய்திகள் :

சுட்டிக்காட்டிய விகடன்; மத்திய கைலாஷ் சாலையில் மூடப்பட்ட வடிகால்; நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

post image

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான வல்லபாய் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அடையார் மற்றும் டைடல் பார்க் பகுதிகளிலிருந்து இருந்து வரும் வாகனங்களால் எப்போதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிப்பதை அந்த பகுதியை கடந்து செல்பவர்கள் அனுபவித்திருப்பார்கள்.

டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையின் போது மத்திய கைலாஷிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் மழை நீர் வடிகால் கால்வாயின் மேல்மூடி திறந்து இருந்தது. தற்காலிக தடுப்பாக பிளாஸ்டிக் பேரிகார்டு குறுக்கே வைக்கப்பட்டிருந்தது. அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இது குறித்து நமது விகடனில் கடந்த 02.12.2024 அன்று, "சாலையின் நடுவே திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால் ,.. மத்திய கைலாஷில் கடும் நெரிசல் - சரி செய்யப்படுமா?" என்று கள நிலவரத்தை விரிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்த நிலையில், தற்போது நாம் சுட்டிக்காட்டிய திறந்து கிடந்த மழைநீர் வடிகால் கால்வாய் முழுமையாக மூடப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் குறைந்து ஓரளவுக்கு வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடிகிறது.

திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, நகராட்சி சார்பில் பெண்களின் நலன் கருதி `கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்' புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும்,... மேலும் பார்க்க

பழனி: `திறந்து கிடக்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு, அச்சுறுத்தல்' - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

ஒரு மாதத்திற்கு முன்பே சாக்கடையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி, இன்னும் சரி செய்யாமல் போடப்பட்டுள்ளது. இது சாலையின் நடுவே உள்ளதால் அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி... மேலும் பார்க்க

பழனி: சேதமடைந்த மின் கம்பம்; அச்சத்தில் மக்கள்... அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

சிதலமடைந்த மின்கம்பத்தை சரி செய்து கொடுக்குமாறு பலமுறை கேட்டும் அலட்சியம் காட்டி வருகின்றனர் அதிகாரிகள். அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.த... மேலும் பார்க்க

பிராட்வே: குளமாகிப்போன மாநகராட்சிப் பூங்கா; ஆபத்தை உணராத சிறுவர்கள்.. அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

தமிழகம் முழுவதுமே கனமழை பெய்து கொண்டிருப்பதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்து வருகிற நிலையில், சென... மேலும் பார்க்க

EPFO: 'வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!' - எதற்கு... எப்படி?

'வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் இறந்தால் அவரது நாமினிக்கு ரூ.2.5 லட்சம் - ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்' என்பது உங்களுக்கு தெரியுமா...இப்படியான EDLI திட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார் Wealth ... மேலும் பார்க்க