செய்திகள் :

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

post image

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குழைக்கும் விதமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபை இணைத்து தனி நாடு வேண்டும் என காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், இந்திய சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள விடியோவில், ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள் மூவர்ணக் கொடியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் அவர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவர்களது கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த விடியோவில் ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள் பாடல்கள் பாடுவதையும், அவர்களை எதிர்த்து மஞ்சள் நிற காலிஸ்தான் கொடியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்புவதையும் அந்த விடியோவில் காணமுடிகிறது.

ஆஸ்திரேலியா முழுவதும் காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மாதம், மெல்பர்னில் உள்ள சுவாமிநாராயண் கோயிலும் இரண்டு உணவகங்களிலும் கிரஃப்டி எனப்படும் பெயிண்டுகளைக் கொண்டு ஆபாச வார்த்தைகளை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

போரோனியாவில் அமைந்துள்ள கோயிலின் வளாகத்தில், "வீட்டிற்குச் செல்லுங்கள் ****" என்ற ஆபாச வாசகத்துடன் ஹிட்லரின் படம் வரையப்பட்டிருந்தது.

சமீபகாலமாகவே இந்தியர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையிலான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து, இந்த வாரத்தில் அயர்லாந்திலும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.

Pro-Khalistan protest disrupts India Independence day celebrations in Melbourne

இதையும் படிக்க : இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

அமெரிக்கா டாலர் மதிப்பைவிட ஜப்பான், இங்கிலாந்து கரன்சி மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் கூறி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை அறிவ... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரியே புதின் பேச்சுக்கு வரக் காரணம்! டிரம்ப்

இந்தியா மீதான வரி விதிப்பே ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, ... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தானில் 3 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்த... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தி... மேலும் பார்க்க

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம... மேலும் பார்க்க