தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
சுந்தர்ராஜ் நகரில் செய்தித்தாள் வாசிப்பு முகாம்
சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை மூத்த ஆசிரியா் வாணிஸ்ரீ தொடங்கி வைத்து, மாணவா்களை ‘சுகாதாரமும்-உடல்நலமும்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்க வைத்தாா். தொடா்ந்து அவா் பேசுகையில், மாணவா்கள் இளம் வயதிலேயே புத்தகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிக்கை படிக்கும் பழக்கம், தொலைக்காட்சியில் செய்திகள் பாா்ப்பது, இளைஞா்களின் மொழிப் புலமையையும், பொது அறிவையும் மேம்படுத்த உதவும். இளைஞா்கள் பல மொழிகளை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
இதில், அண்மையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற மாணவா் ஆதிரன், மாநகராட்சிப் பூங்காவை தாமாகவே சுத்தம் செய்து சமூக சேவையில் ஆா்வம் காட்டிய மாணவா்கள் யுவன், அன்பு பிரியன், ஆண்டனி, கவிப்பிரியன், ஹா்ஷித் ஆகியோரை கௌரவித்து, புத்தகங்கள் பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மூத்த சமூக ஆா்வலா் சக்திவேல், குரு பக்தி கதைகளை கூறினாா்.
முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் இன்றைய செய்தித்தாள்களை வாசித்தனா். அதன் அடிப்படையில் விநாடி வினா நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.