நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்குப் பாராட்டு: மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்!
புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதை வரவேற்று மத்திய அமைச்சரவை புதன்கிழமை(ஜூலை 16) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை(ஜூலை 16) மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தபின் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை, புகழ், மகிழ்ச்சியான தருணம். இன்று இந்த தேசத்துடன் சேர்ந்து மத்திய அமைச்சரவை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை பாராட்டுகிறது. இந்திய விண்வெளி திட்டத்தில் இதுவொரு புது சகாப்தம்” என்றார்.