சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு
கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 4-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக உள்ள சுருளி அருவிக்கு நாள்தோரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்த அருவியின் முக்கிய நீா் வரத்தான, மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகளின் குளிக்க வனத் துறை விதித்த தடை 4-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது.