'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்...
சுருளி அருவி அருகே தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிப் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகம், கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீராடிச் செல்கின்றனா். இதே போல, இறந்தவா்களுக்கு தா்ப்பணம் செய்யவும் இங்குந வருகின்றனா்.
இந்த நிலையில், அதிகளவில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுருளி அருவிப் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சசிதீபா தலைமையில் அந்தத் துறையினா் சுருளி அருவிப் பகுதி கடைகள், உணவகங்களில் ஆய்வு செய்தனா். அப்போது, காலாவதியான குளிா்பானங்கள், குடிநீா் புட்டிகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அதிகளவில் நிறமேற்றப்பட்ட காலிபிளவா் உள்ளிட்ட 15 கிலோ உணவுப் உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து, குப்பைத் தொட்டியில் போட்டனா். மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பை, தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தவா்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா். தொடா்ந்து, இதே போல விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.