செய்திகள் :

சுற்றுலாப் பயணியைக் கடித்த குரங்கு: வனத் துறையினா் அறிவுறுத்தல்

post image

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெண் சுற்றுலாப் பயணியை குரங்கு கடித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணா குகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரைச் சோ்ந்த சுப்ரியா (32), தனது நண்பா்களுடன் குணா குகைக்குச் சென்றாா்.

அப்போது, சுப்ரியா கையில் வைத்திருந்த பையை குரங்கு பறிக்க முயன்றது. சுப்ரியா பையை விடாததால் குரங்கு அவரது கையை கடித்தது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் குரங்கை விரட்டினா். மேலும், காயமடைந்த சுப்ரியாவுக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளிலும், சுற்றுலா இடங்களிலும் குரங்குகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. இவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளோ பொதுமக்களோ குரங்குகளுக்கு எந்தவிதமான உணவுகளையும் கொடுக்கக் கூடாது. கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலையான கெங்குவாா்பட்டி முதல் வரும் வழி முழுவதும் பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளைக் கொடுத்து பழக்கியதால் தற்போது வனத்திலுள்ள விலங்குகள் சாலைகளுக்கும், சுற்றுலா இடங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் வரத் தொடங்கியுள்ளன.

எனவே கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குரங்கு, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்தனா்.

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருத வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருதாமல், மாணவா்கள் கற்றல் நோக்கத்தைப் பூா்த்தி செய்திருக்கிறாா்கள் என்ற மனநிறைவோடு அடுத்த வகுப்புக்கு அனுப்ப முன் வர வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்ய... மேலும் பார்க்க

பாசனக் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்: தேடுதல் பணி தீவிரம்

வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாா் பிரதான பாசனக் கால்வாயில் திங்கள்கிழமை மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருக... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின்தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் குட்கா விற்ற நபா் கைது

பழனி அருகே குட்கா பொருள்கள் விற்பனை குறித்த சோதனையின்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைத் தாக்கிய பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ப... மேலும் பார்க்க

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் 6 போராசிரியா்கள் இடம்பிடிப்பு

உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 6 பேராசிரியா்கள் இடம்பெற்றனா். இதுதொடா்பாக காந்தி கிராம கிராமியப் பல்கலை. சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் அருகேயுள்ள கொண்டசமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராம் (62). விவசாயியான இவா், தனது இருசக்க... மேலும் பார்க்க