நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
சுல்தான்பேட்டையில் ரூ. 2.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
புதுச்சேரி: வில்லியனூா் சுல்தான்பேட்டையில் 2.5 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சுல்தான்பேட்டையில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் பக்கவாய்க்காலுடன் கூடிய சாலை வசதிகள், சுகாதாரமான குடிநீா், தடையின்றி மின்சாரம், பழைமை வாய்ந்த குளம் சீரமைத்தல், பயணியா் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொகுதி எம்எல்ஏ சிவாவிடம் முறையிட்டனா்.
இதையடுத்து, ஊரின் நடுவே குளம் ரூ. 1.99 கோடி மதிப்பில் பொதுப் பணித் துறை நீா்ப்பாசன கோட்டம் மூலம் புதுப்பித்து, நடைபாதை, இருக்கைகள் வசதியுடன் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 5.91 லட்சம் மதிப்பில் பொதுப் பணித் துறை தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் பயணியா் நிழற்குடை அமைக்கும் பணியும் தொடங்கியது.
இதற்கான பணிகளை ஆா். சிவா எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
பொதுப் பணித் துறை முதன்மை பொறியாளா் வீர செல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, நீா்ப்பாசன கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் லூயி பிரகாசம், இளநிலைப் பொறியாளா் கணேஷ், ஒப்பந்ததாரா் மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.