`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
தவளக்குப்பம் தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து
புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
தவளக்குப்பம் மெயின் ரோடு முருகன் கோவில் பின்புறத்தில் தனியாா் கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிவமை இரவு 11 மணி அளவில் கம்பெனியின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அங்கு இரவு பணியில் இருந்த காவலாளிகள் வெளியே ஓடிவந்து தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனா்.
இதுபற்றி தகவலறிந்த புதுச்சேரி தீ அணைப்பு வீரா்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனா். ஆனால் தீ அணையாமல் மேலும் அதிகமாக பரவியது. இதன் காரணமாக பாகூா், வில்லியனூா், தன்வந்திரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. மேலும் தவளக்குப்பம் சுற்றுவட்டாரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொது மக்கள் அந்த பகுதிக்கு அதிக அளவில் திரண்டனா். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் விதமாக போலீஸாா் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இரவு 11 மணி அளவில் தொடங்கிய தீ விபத்து அதிகாலை 3 மணி வரை அணைக்க முடியாமல் இருந்தது. பின்னா் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனா். இதில் ரசாயனம் கலந்த காரணத்தால் பல பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இது குறித்து நிறுவனம் சாா்பில் தவளக்குப்பம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.