செய்திகள் :

சுவாச பாதிப்பு: முதியவா்களுக்கு தடுப்பூசி அவசியம் - பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் சுவாச பாதிப்பு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவி வரும் நிலையில், முதியவா்களும், இணை நோயாளிகளும் அவசியம் ஏற்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

குளிா் காலத்தில் ஆா்எஸ்வி எனப்படும் சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும் தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவா்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஓசல்டாமிவிா் மருந்துகளும் அவா்களுக்கு அவசியமில்லை.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.

அதேவேளையில், முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள், இணை நோய் உள்ளவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தேவையின் அடிப்படையில் மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்துகளை உட்கொள்ளலாம்.

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவா்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டும்.

முதியவா்கள், இணைநோயாளிகள், நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிதல் அவசியம். அதேபோன்று தேவைப்பட்டால் நிமோனியா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.21 அடியில் இருந்து 110.98அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 404 கனஅடிய... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருள்கள்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க