‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆக. 2-இல் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சூடான இட்லியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்! ஹார்வர்ட் மருத்துவர் சொன்ன தகவல்
இட்லி வயிற்றுக்கு நலம் பயக்கும் உணவுகளுள் முக்கியமான ஒன்று என்று ஹார்வர்ட் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றி கேஸ்ட்ரோ-எண்டராலஜி (குடல் நலம்) துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர் சௌரப் சேத்தி, குடலுக்கும் மூளைக்கும் இருக்கும் தொடர்புக்கு பலம் சேர்க்கும் சிறந்த உணவுகளை பட்டியலிட்டுள்ளார்.
அதில் ‘யோக்ஹர்ட்’ எனப்படும் புளிப்பு குறைந்த தயிர் முதலிடம் பிடிக்கிறது. ப்ரோ பயோட்டிக்ஸ் நிறைந்த இந்த தயிர், குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் நரம்பு மண்டலம் ஆரோக்கியமடைகிறது. மேலும், மன அழுத்தம், குறையவும், தெளிவாக யோசிக்கவும் ஒருவரால் முடிகிறது என்கிறார்.
அவகாடோ பழம் (ஆனைக்கொய்யா அல்லது வெண்ணெய்ப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது). இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு நல்லது. நார்ச்சத்தும் மூளைக்கு தேவையான நுண் ஊட்டச்சத்துகளும் இப்பழத்தில் உள்ளன. உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் சமநிலை இழக்கும் நிலைமை வரவிடாமல் செய்வதில் அவகாடோ பலனளிக்கிறது.
அடுத்ததாக, காலிஃபிளவர் மூளையில் வீக்கம் ஏற்படுவதை குறைப்பதால் இதற்கும் இந்த பட்டியலில் இடமுள்ளது.
ஸ்வீட் பொட்டேட்டோ எனப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் அதிகமுள்ளதால் குடல் நலத்துக்கு அருமையான உணவு.
இதே வரிசையில், ப்ளூபெரீஸ் எனப்படும் நாவல் பழத்துக்கும் முக்கிய இடமுண்டு.
‘பாப்கார்ன்’, வெண்மை நிறத்தில் பளிச்சிடும் ‘பிரெட்’ இவை குடல் - மூளை தொடர்புக்கு தீங்கு சேர்க்கும் உணவுகளாக, நிறையவே சாப்பிடக்கூடாத உணவுகளாக அந்த பட்டியலில் சொல்லப்பட்டுள்ளது.
நம் பாரம்பரிய உணவான இட்லிக்கு முக்கியத்துவம் அளித்து பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் நலம், மூளை ஆரோக்கியத்துக்கு இட்லியிலுள்ள ப்ரோ பயோட்டிக் பொருள்கள் இருப்பதால் நல்லதொரு உணவாக பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக... ‘இட்லி’ ஒரு சிறந்த பிரேக்-ஃபாஸ்ட் உணவு என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது.