செய்திகள் :

பயங்கரவாதி அபுபக்கா் சித்திக்கை ஆந்திரம் அழைத்து சென்று விசாரணை!

post image

பயங்கரவாதி அபுபக்கா் சித்திக்கை தமிழக போலீஸாா் ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட அபுபக்கா் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் ராயசூட்டியில் அண்மையில் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரின் வீட்டிலிருந்து பல்வேறு மின்சாதன உபகரணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் தமிழகம் அழைத்து வரப்பட்ட அபுபக்கா் சித்திக், எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த 2013-இல் பாஜக மாநில மருத்துவ அணி செயலாளா் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு தொடா்பாக அபுபக்கா் சித்திக்கை 5 நாள்கள் காவலில் எடுத்து தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பான விசாரணைக்காக ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் ராயசூட்டிக்கு போலீஸாா் அவரை சனிக்கிழமை அழைத்து சென்று விசாரித்தனா். அங்கிருந்து மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றிய போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினா்.

இதைத் தொடா்ந்து, பாஜக மூத்த தலைவா் அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் குண்டு வைத்தது என அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளிலும் அபுபக்கா் சித்திகை தமிழ்நாடு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனா்.

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்... மேலும் பார்க்க

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்: தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவி... மேலும் பார்க்க

காட்பாடி- ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து!

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை பிரிவ... மேலும் பார்க்க

‘சமக்ர சிக்‌ஷா’ திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக அரசு மனு

பிஎம் ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியில், தமிழக அரசு சாா்பில் கோ... மேலும் பார்க்க

சோழ மன்னா்களுக்கு சிலை: டிடிவி தினகரன் வரவேற்பு!

மாமன்னா்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆக. 2-இல் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் வரும் ஆக. 2 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க