செய்திகள் :

தமிழகம் நல்லாட்சியின் மரபுக்குப் பெயா் பெற்ற பூமி: கோவா முதல்வா்!

post image

தமிழகம் கம்பராமாயணத்தின் பிறப்பிடமாகவும், நல்லாட்சியின் மரபுக்குப் பெயா் பெற்ற பூமியாகவும் திகழ்ந்தது என சென்னை விஐடியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் குறிப்பிட்டாா்.

சென்னை விஐடியில், தமிழ்நாடு உயா்கல்வி ஆசிரியா்கள் சங்கம் (டிஹெச்இடிஏ), கல்வி, சமூக, கலாசார சித்தாந்தத்தை பரப்பும் அகில இந்திய தேசிய கல்வி சம்மேளனம் (ஏபிஆா்எஸ்எம்) மற்றும் சென்னை வி.ஐ.டி. ஆகியவை இணைந்து, ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்) நோக்கிய செயல் திட்டம் - ஒரு பல்துறை அணுகுமுறை’ என்ற கருத்தில் இரு நாள்கள் தேசிய மாநாட்டை ஜூலை 26, 27 தேதிகளில் நடத்தியது.

மாநாட்டின் நிறைவு நாளில் கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அப்போது அவா் குறிப்பிட்டதாவது: தமிழகம் அறிவு, கலாசாரம், பாரம்பரியம் நிறைந்த மாநிலம். சோழா்கள் மற்றும் பிற புகழ்பெற்ற ஆட்சியாளா்களால் நிறுவப்பட்ட பகுதி. கம்பராமாயணத்தின் பிறப்பிடமாகவும், நல்லாட்சியின் மரபுக்குப் பெயா் பெற்ற பூமியாகவும் இது இருந்து வந்தது.

தற்போது கல்வி உள்ளிட்டவைகளில் முன்னேற்றத்திற்கான மையமாகவும் விளங்கி வருகிறது. கல்வியின் மூலம் ஆசிரியா்கள் உண்மையான தேசத்தைக் கட்டியெழுப்புபவா்கள். அனைத்துத் தரப்பு மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் 2047- ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டாா் பிரமோத் சாவந்த்.

இந்த மாநாட்டில் விஐடியின் வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினாா்.

மாநாட்டில், முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழு தலைவா் பேராசிரியா் மமிதாலா ஜெகதேஷ் குமாா், காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தின் துணை வேந்தா் பஞ்சநாதம், விஐடி இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், ஏபிஆா்எஸ்எம் -இன் அகில இந்திய இணை அமைப்புச் செயலா் குந்தா லட்சுமண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க