சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை: துரை வைகோ
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை; அது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. திமுக ஆட்சியில் நிகழக்கூடிய சிறு சிறு தவறுகளை மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன. அதற்காக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கருத முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எப்போதும் சாத்தியமில்லை. அது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும் என்றாா் அவா்.