தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தியாகராசனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பெப்பாளப்பள்ளி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராம மக்களுக்கு ஊராட்சி மூலம் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் இக்கிராம மக்கள் குடிநீருக்காக பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்துள்ளனா். இந்த நிலையில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சியிலும் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் சூளகிரி - ராயக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸாா், வருவாய்த் துறை அலுவலா்கள் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீா் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.