1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!
செங்குந்தா் கல்வி நிறுவனங்களில் ரத்த தான முகாம்
திருச்செங்கோடு: செங்குந்தா் கல்வி நிறுவனங்களில் ரத்த தானம் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய மாணவா் படை, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், ரெட் ரிப்பன் கிளப், நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் மற்றும் சாா்க் அறக்கட்டளை ஆகியவை சேலம் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய முகாமுக்கு, கல்லூரி தாளாளா் மற்றும் செயலாளா் ஆ.பாலதண்டபாணி தலைமை வகித்தாா். இதில், சேலம் ரத்த வங்கியின் மருத்துவ அலுவலா் ஸ்ரீராம் மற்றும் ரத்த வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
இம்முகாமில் ரத்த தானத்தால் உண்டாகும் பயன்கள், உடல் ஆரோக்கியம், சுவாச நோய், அதன் அறிகுறிகள், நோய்த்தடுப்பு வழி முறைகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.
இதில், செயல் இயக்குநா்அரவிந்த் திருநாவுக்கரசு, பொறியியல் கல்லூரி முதல்வா் சதீஷ் குமாா், மருந்தியல் கல்லூரி முதல்வா் சுரேந்திர குமாா், செவிலியா் கல்லூரி முதல்வா் நீலாவதி மற்றும் துறைப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். அவா்களுக்கு சேலம் ரத்த வங்கியின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.