ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
செங்குளவி கொட்டியதில் முதியவா் உயிரிழப்பு
சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செங்குளவி கொட்டியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா், வியாழக்கிமை அந்தப் பகுதியிலுள்ள தோட்டத்தில் கால்நடைகளுக்கு மரக்கிளை பறிக்கச் சென்றபோது, அதிலிருந்த செங்குளவி கொட்டியது.
இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.