மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
செஞ்சி அருகே வங்கதேச பெண் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசின் எவ்வித அனுமதியின்றி கடந்த 3 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஷெலீனா பீ என்ற பெண் கைது செய்யப்பட்டாா்.
மேல்மலையனூா் வட்டம், சங்கிலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சையத்காதா்(28). இவரது மனைவி ஷெலினா பீ(38). இவா் மீது சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவரது நாடு வங்கதேசம் எனத் தெரியவந்தது.
சையத்காதா் மும்பையில் வேலை செய்தபோது இவா்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு சங்கிலிகுப்பத்துக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இப்பெண் கத்தாரில் வேலை செய்து வந்துள்ளாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த ஷெலினா பீயை மேல்மலையனூா் போலீஸாா் கைது செய்து செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கணவா் கைது: மேலும், சங்கிலிகுப்பம் கிராமத்தில் 48 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்து, ஷெலினா பீயின் கணவா் சையத்காதா் கைது செய்யப்பட்டாா்.
சையத்காதா் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்ற போது, ஷெலினா பீ வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்பது வெளிப்பட்டது.