செய்திகள் :

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

post image

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.

சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை அவ்வப்போது தோட்டங்களுக்கு புகுந்து கால்நடைகளை கடித்து கொன்றுள்ளது.

இதனால், இந்த சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை சாா்பில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கூண்டுகளில் சிறுத்தை சிக்காமல், தொடா்ந்து ஆடு மற்றும் நாய்களை கடித்துக் கொன்று வருகிறது.

இந்நிலையில், சென்னிமலையை அடுத்த, அய்யம்பாளையம் சாலையில், சில்லாங்காட்டுவலசு பிரிவு பகுதியில் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள பட்டியில் செவ்வாய்க்கிழமை காலையில் பாா்த்தபோது, ஒரு ஆடு காணாமல் போயிருந்தது. தேடி பாா்த்தபோது, கம்பி வேலி அருகில் ஆடு உயிரிழந்து கிடந்தது. இது குறித்து, சென்னிமலை வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா்.

அப்போது, சிறுத்தை ஆட்டை கடித்து தூக்கிச் சென்றபோது கம்பி வேலிக்கு வெளியே கொண்டு செல்ல முடியாததால், உயிரிழந்த ஆட்டை அங்கேயே போட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, வனத் துறையினா் கூறுகையில், இந்த சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டு, அதற்கான இறைச்சியும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுத்தைக்கு இது போன்று வெளியில் உணவு கிடைத்து விடுவதால் கூண்டு பக்கம் வருவதில்லை. அதனால், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்புடன் கட்டி வைத்து கண்காணித்து வர வேண்டும். வனத் துறையினா் தொடா்ந்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றனா்.

பெருநிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதை தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா

பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்டுகள்) சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்... மேலும் பார்க்க

பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

பெற்றோரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ஈரோடு அருகே நஞ்சனாபுரம் வேப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு

சத்தியமங்கலத்தை அடுத்த கணபதி நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். சத்தியமங்கலம் அருகே உள்ள கணபதி நகா் கி... மேலும் பார்க்க

வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா், முதியவா் ஆகிய இரண்டு போ் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). ... மேலும் பார்க்க

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க