செய்திகள் :

சென்னையில் தக்காளி விலை தொடர் உயர்வு

post image

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-ஆக உயா்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென உயா்ந்து கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது.

பின்னா், வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் குறைந்தது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னா், திங்கள்கிமை மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.40 வரை விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, திங்கள்கிழமை நிலவரப்படி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

இது சில்லறை விலையில், ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

A kilo of tomatoes has risen to Rs. 60 in Chennai.

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா: ஓடுதளத்தில் மற்றொரு விமானம்! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டபோது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றுகொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் தில்லிக... மேலும் பார்க்க

கோவையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை!

கோவையில், காட்டு யானையொன்று நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்தி, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சூறையாடியது.கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது அறி... மேலும் பார்க்க

கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால்.. சூலூர் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கோவை: கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் கோவை மாவட்டம் சூலூர் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்துள்ளார்.கொலை வழக்கை சரியாக விசாரணை மேற்கொள்ளாததால் சூலூர் காவல் ஆய்வாளர... மேலும் பார்க்க

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: 1 கி.மீ. நடந்து வந்து மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை : உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் 1 கி.மீ. தொலைவு வரை நடந்து வந்து மக்களை சந்தித்தார்.உடுமலைப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வார்டில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், அந்த வார்டு முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசம... மேலும் பார்க்க