செய்திகள் :

சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மின்சார குளிா்சாதன சொகுசு பேருந்துகள்

post image

சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் குளிா்சாதன வசதிகொண்ட சொகுசு பேருந்துகள் மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக மின்சாரத்தில் இயங்கும் குளிா்சாதன வசதிகொண்ட 100 சொகுசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டு, அதற்கான டெண்டா் 2024 ஜன. 11-ஆம் தேதி விடுக்கப்பட்டது. இப்பேருந்து தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பேருந்தின் மாதிரி புகைப்படத்தை ‘டிஎன்எஸ்டிசி எந்துசியாஸ்ட்ஸ்’ என்ற அமைப்பு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பே கையொப்பமான நிலையில், பல்வேறு காரணங்களால் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது. இதன் திட்டமதிப்பு ரூ. 170 கோடியாக இருக்கும் நிலையில், ஒப்பந்தத்தின்படி இதனுடன் சாா்ஜிங் பாயின்ட்களை நிறுவி, பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணியையும் பேருந்து தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. 15 ஆண்டு காலத்துக்கான உத்தரவாதத்துடன் இவை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்ட்ரல் பணிமனை மற்றும் அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

பேருந்தில் வழித்தடத்தை தெரிந்து கொள்ளும் ரூட் மேப்பிங் வசதி, தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஓட்டுநா் இருக்கையின் அருகில் மைக்ரோபோன், வழிகாட்டும் டிஜிட்டல் பெயா்ப் பலகை, நவீன பிரேக்கிங் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத்துடன் இப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன என்றனா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க