முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
சென்னை ஏசி மின்சார ரயிலின் நேரம் மாற்றியமைப்பு!
சென்னை புறநகர் ஏசி மின்சார ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குளிர்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் தொடங்கப்பட்டது.
இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படுகிறது.
இதுபோன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில் பாதையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது.


இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்நிலையில், ரயிலின் நேரம் மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் 63747 13251 எனும் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணில் கருத்து தெரிவிக்கலாம் என்று முன்னதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பயணிகள் அளித்த கருத்துகளின் அடிப்படையில், ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் இயக்கப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி,மே 2 ஆம் தேதி சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை 3-ல் இருந்து 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 2 - 19 ஆம் தேதி வரை புறநகர் ஏசி ரயில் திரிசூலம் ரயில் நிலையத்தில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.