செய்திகள் :

சென்னை: கொலையில் முடிந்த தாய் - மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?

post image

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ரித்திகாவுக்கும் முகப்பேரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணனுடன் ரித்திகா பழகுவதைக் கண்டித்திருக்கிறார் மைதிலி. இந்நிலையில் வீட்டுக்குத் தாமதமாக வந்த ரித்திகாவை மைதிலி சத்தம் போட்டிருக்கிறார். அதனால் தாய், மகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்த ரித்திகா, வீட்டை விட்டு வெளியில் சென்றிருக்கிறார். உடனே அவரைச் சமரசப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் மைதிலி. அதன்பிறகும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரித்திகா, தன்னுடைய காதலன் கண்ணனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரும்படி கூறியிருக்கிறார். அதன்படி கண்ணனும் அங்குச் சென்றிருக்கிறார்.

மைதிலி

கண்ணனுக்கும் மைதிலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன், மைதிலியின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் மைதிலி மயங்கி விழுந்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் மைதிலி கண்விழிக்காததால் அதிர்ச்சியடைந்த ரித்திகா, தன்னுடைய அம்மா மைதிலியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு மைதிலி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மைதிலியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரித்திகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் கண்ணன், மைதிலியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணனை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து ரித்திகாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கரூர் தண்டவாளத்தில் விரிசல்; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் துரித செயல்; 100 மீட்டர் முன்பு நின்ற ரயில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. இந்நிலையில், அதன் அருகே குடியிருந்து வரு... மேலும் பார்க்க

குழந்தைகள் கண்முன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; மும்பையில் பகீர் சம்பவம்; நடந்தது என்ன?

மும்பையில் தனக்குச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்த நண்பருக்கு வாலிபர் ஒருவர் துரோகம் செய்துள்ளார்.மும்பை மலாடு மால்வானி காவ்தேவி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ் சவான். இவரது மனைவி பூஜா. இத்தம்பதிக்க... மேலும் பார்க்க

ரயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய போலீஸார்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்... மேலும் பார்க்க

விஜய் படம் பாணியில் அரசு பேருந்து இருக்கையில் வைக்கப்பட்ட அரிவாள்; பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் எதிர் எதிரே இயங்கி வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி கிராமப் பகுதிகள், வால்பாறை மற்றும் க... மேலும் பார்க்க

மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே திரும்பிய விமானம்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தானாஜி சாவந்த் மகன் ரிஷிராஜ் சாவந்த் நேற்று மாலை புனே விமான நிலையத்தில் மர்ம நப... மேலும் பார்க்க

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க