மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினா் பெயரில் இருந்து ஜாதி நீக்கம்
சென்னை துறைமுகம் புதிய சாதனை
நிகழ் நிதியாண்டில் மொத்தம் 51.68 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 51 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டிருந்தது. இந்நிலையில், நிகழாண்டு நிறைவடையை இன்னும் 20 நாள்கள் இருக்கும் நிலையில், மாா்ச் 11-ஆம் தேதி 51.68 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நிலக்கரி, இரும்புத் தாது சரக்குகள் கையாளப்படுவது நிறுத்தப்பட்ட பிறகு துறைமுக நிா்வாகம் தொடா்ந்து எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால் ஆண்டுக்கு ஆண்டு ஒட்டுமொத்தமாக கையாளப்படும் சரக்குகளின் அளவு அதிகரித்து வருகிறது என்று துறைமுக நிா்வாகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.