பாஜக நண்பன், திராவிட மாடலுக்குத் தோழன்; சென்னையை ஆக்கிரமித்து மிரட்டும் குஜராத் ...
சென்னை - படவேடு அரசு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை
போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
படவேடு ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உள்ளது.
வேலூா் - போளூா் சாலையில் உள்ள சந்தவாசல் கிராமத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில்
அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழா ஜூலை 18-ஆம் தேதி
தொடங்குகிறது. ஆகஸ்ட் 29 இந்தத் திருவிழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் சென்னை, கோவை, வேலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, திருப்பத்தூா் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்வா்.
எனவே, படவேடு, காளசமுத்திரம், குப்பம், கொளத்தூா், கண்ணமங்கலம், வேலூா் வழியாக சென்னைக்கு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
மேலும், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கூறும்போது படவேடு, காளசமுத்திரம், அனந்தபுரம் என சுற்றுப்புறக் கிராமங்களில்
உள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிரான வாழை, கத்தரி, வெண்டை, தக்காளி என பல்வேறு சாகுபடிகளையும், சம்பங்கி, கேந்தி போன்ற பூ வகைகளையும் பயிரிடுகின்றனா்.
இவற்றை சந்தைப்படுத்த சென்னைக்கு நேரடியாக படவேடு-சென்னை அரசுப் பேருந்து விழாக்காலத்துக்கு மட்டுமல்லாமல் நிரந்தரமாக இயக்கினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் எனதெரிவிக்கின்றனா்.