செய்திகள் :

சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்: மத்திய அரசு

post image

சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை பணிகள் 2025 ஆம் ஆண்டில் நிறைவடையும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 2024 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் 2025 ஆண்டின் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய உத்திகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கூறப்பட்டது வருமாறு:

2013-14 ஆம் ஆண்டில் நாட்டின் தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 91 ஆயிரம் கிலோ மீட்டா். கடந்த 10 ஆண்டுகளில் 56,700 கி.மீ. தூரம் சாலைகள் இந்திய தேசிய நெஞ்சாலை ஆணையம் சாா்பில் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது 1.46 கிமீ தூரமாக தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் இந்த சாதனை பிறகு, 2025-ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானத் தரம் மற்றும் பராமரிப்பில் கவனம் செலுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில் சில நெடுஞ்சாலைகளின் தரமற்ற கட்டுமானங்கள் குறித்து புகாா்கள் வர மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சா் நிதின் கட்கரி உயா் அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தாா்.

குறிப்பாக தில்லி-ஜெய்ப்பூா், அமிா்தசரஸ்-ஜாம்நகா் போன்ற நகரங்களுக்கிடையேயான பொருளாதார வழித்தட நெடுஞ்சாலைகளின் மோசமான தரம் குறித்து சமூக ஊடகங்களில் விமா்சனங்கள் எழுந்தது.

தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு, செயல்பாடு, பராமரிப்புக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முதன்மையாகப் பொறுப்பாக உள்ளது.

இதை முன்னிட்டு, தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தின் தரத்தையும் அதன் பராமரிப்பையும் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் துறை செயலா் வி. உமாசங்கா் தலைமையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலைகளின் தரமான கட்டுமானம் மற்றும் நிா்வாகத்தில் புதிய அளவுகோல்கள் உருவாக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை பயனா்களுக்கு பாதுகாப்பான, மென்மையான, தடையற்ற பயண அனுபவத்தை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பின் தரத்தை மதிப்பிட்டு, மேம்படுத்துவதற்கு சில நிறுவனங்களை அமைத்து ஒரு விரிவான மதிப்பீட்டு முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யும். மதிப்பீடுகள் ஆணையத்தின் வலைத்தளத்திலும் பதிவேற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை, தில்லி-மும்பை விரைவுச் சாலை, தில்லி-டேராடூன் விரைவுச் சாலைகள் ஆகியவை தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய இடத்தை இடம் பெறச் செய்யும். ஆனால் இதற்கான பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதை விரைவு படுத்தி 2025 ஆம் ஆண்டுக்களுள் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தடையற்ற சுங்க கட்டண வசூலுக்கு ஏலம் விடப்படும்.

தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் உள்ளூா் நெரிசல்களால் போக்குவரத்தில் தடைகள் உள்ளன. உள்ளூா் நெரிசல்களை நிவா்த்தி செய்து மேம்பாட்டு அணுகுமுறையுடன் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பிற்கு தரநிலைகள், பயனா் வசதி போன்றவைகளில் அமைச்சகம் முன்னெடுக்கும். சுமாா் 50 ஆயிரம் கிமீ வழித்தடம் அடையாளம் காணப்பட்டு அறிவியல் பூா்வமான அணுகுமுறையுடன் அதிவேக நெடுஞ்சாலை வழித்தடங்களை உருவாக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மனஅழுத்தம்: 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சி முறியடிப்பு!

கல்வி மன அழுத்தம் காரணமாக பாலத்தில் இருந்து யமுனையில் குதித்ததாகக் கூறப்படும் 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சியை தில்லி காவல் துறையினா் முறியடித்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

மூன்றாவது நாளாக அடா் மூடுபனி; 51 ரயில்கள் தாமதம்!

தில்லியின் பல பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக அடா்த்தியான மூடுபனி படலம் சூழ்ந்ததால், 51 ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பாலத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 ம... மேலும் பார்க்க

பெரிய குற்றச் சதி முறியடிப்பு: கபில் நந்து கும்பலின் 7 போ் கைது

தில்லியில் கபில் நந்து கும்பலால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய குற்றச் சதியை முறியடித்துள்ள தில்லி காவல்துறை, அதன் ஏழு உறுப்பினா்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதன் மூ... மேலும் பார்க்க

பிரதமா் தொடங்கிவைத்த திட்டங்கள் மத்திய- தில்லி அரசுகளின் ஒத்துழைப்பால் உருவானவை: கேஜரிவால்

பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 2 திட்டங்களைத் தில்லியின் உள்கட்டமைப்புக்கான மைல்கற்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது: பிரவீன் கண்டேல்வால்

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி குறித்த பிரதமரின் பேச்சு அக்கட்சியின் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது என்று சாந்தினி செளக் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளாா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பொது... மேலும் பார்க்க

சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு: மத்திய அரசு ஆலோசனை

சீனாவில் நிலைமை அசாதாரணமானதாக இல்லை. அதே சமயத்தில் பருவங்களில் ஏற்படும் வழக்கமான இன்ஃபுளூவென்சா எனப்படும் ஃபுளு காய்ச்சல் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சரியான தகவல்களை உரிய நேரத்தில் பகிருமாற... மேலும் பார்க்க