கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!
சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், மீனம்பாக்கம் ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் முடிந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்பும் நெரிசல் மிக்க மாலை நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.