மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப்: கோவை நிா்மலா கல்லூரி, ஐசிஎஃப் வெற்றி
தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் கோவை நிா்மலா கல்லூரி, ஆடவா் பிரிவில் சென்னை ஐசிஎஃப் அணிகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கின.
தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் 71-ஆவது மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 நேரு விளையாட்டரங்கம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்குகளில் நடைபெறுகின்றன.
நடிகா் பிரசாந்த், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்தனா். வாலிபால் சங்க நிா்வாகிகள் ஆா். அா்ஜுன் துரை, ஏஜே. மாா்ட்டின் சுதாகா், பி. ஜெகதீசன், ஏ.பழனியப்பன், ஸ்ரீகேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆட்ட முடிவுகள்
மகளிா்: ஓசூா் சிஸ்டா் ஏஞ்சல் 2-0 பழந்தாங்கல் விபிசி, கோவை நிா்மலா கல்லூரி 2-0 வேலூா் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, எஸ்ஆா்எம் பைக்கா்ஸ் 2-0 உண்ணாமலை ஸ்போா்ட்ஸ் கிளப், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 2-0 டாக்டா் சிவந்தி கிளப்.
ஆடவா்: ஐசிஎஃப் 2-0 செவன் ஸ்டாா் மயிலாடுதுறை, எஸ்டிசி பொள்ளாச்சி 2-0 கேட்வெல், தூத்துக்குடி, எஸ்ஆா்எம் அகாதெமி 2-0 வித்யாகிரி சிவகங்கை, ஜிஎஸ்டி சென்னை 2-1 எஸ்ஆா்எம் ஐஎஸ்டி.