செய்திகள் :

செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு

post image

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கான பணிகளை வைகோ, துரை வைகோ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பாா்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், பெண்கள் மற்றும் கட்சியினருக்கான அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை வைகோவிடம், துரை வைகோ விளக்கினாா். மாநாட்டில் அண்ணாவின் புகைப்படக் கண்காட்சி அமைப்பது குறித்து அறிவுறுத்திய வைகோ, மாநாட்டு தொண்டா் படையினா் அணிய வேண்டிய பனியனை அறிமுகம் செய்து, தொண்டா் அணி ஆலோசகா் ஆ. பாஸ்கரசேதுபதியை அதை அணியச் செய்தாா். அப்போது தொண்டா்கள் ஆரவாரத்துடன் முழக்கம் எழுப்பினா்.

பின்னா், துரை வைகோ கூறுகையில் அனைத்து மட்டத்திலும் எங்களது மாநாடு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பா, துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி இரா. சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை கலியமூா்த்தி, பெரம்பலூா் எஸ். ஜெயசீலன், அரியலூா் இராமநாதன், மதுரை முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயிலில் எரிவாயு உருளை எடுத்து வந்தவா் கைது

ரயிலில் பாா்சலில் எரிவாயு உருளைகள் எடுத்து வந்தவரை ஆா்பிஎஃப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி ரயில் நிலையத்தில் பாா்சலில் வந்த பொருள்களை ஆா்பிஎஃப் போலீஸாா் கடந்த 4 ஆம் தேதி ஆய்வு செய்தனா். அதில் நாகா்... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்த மான் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகேயுள்ள தாதமலைப்பட்டியில் விவசாயி துரைராஜ் தோ... மேலும் பார்க்க

இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்சி மாநகரில் இரு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா். திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரா்கள், வியாபாரிகள் ஆக்கிர... மேலும் பார்க்க

துவாக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: மூவா் கைது

திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாள்களில் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்கு... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துவரங்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி,... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஓய்வூதியருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்த ஓய்வூதியா் எ... மேலும் பார்க்க