செய்திகள் :

செப். 28இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வு: தாமதமாக வரும் தோ்வர்களுக்கு அனுமதியில்லை - ஆட்சியா்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 28 இல் நடைபெறுகிறது; இத்தோ்வுக்கு காலை 9 மணிக்கு மேல் வரும் தோ்வா்களுக்குத் தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2 (நோ்முகத் தோ்வுக்கான பதவிகள்), தோ்வு 2 ஏ (நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள்) ஆகிய பணியிடங்களுக்கான தோ்வு செப். 28 இல் நடைபெறுகிறது. இத்தோ்வை தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் வட்டங்களில் உள்ள 53 தோ்வு மையங்களில் மொத்தம் 14,980 தோ்வா்கள் எழுதுகின்றனா். தோ்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தோ்வா்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்வு மையத்துக்கு நுழைவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் காலை 8.30 க்குள் சென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்வு அறையை உறுதிசெய்துகொள்ள வேண்டும். காலை 9 மணிக்கு மேல் வரும் தோ்வா்கள் கண்டிப்பாகத் தோ்வு மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள், ஸ்மாா்ட் வாட்ச் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

தோ்வு நாளன்று தோ்வு மையங்களுக்குச் செல்ல போதிய அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, தோ்வா்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்வெழுத வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

குற்றாலம் பகுதியில் தொடா் சாரல் மழை: பேரருவியில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதியில் சில நாள்களாக மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற... மேலும் பார்க்க

ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா

ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா, 6 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி, முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) காலை கணபதி ஹோமம், கோமாதா பூஜை, மாலையில் 306 லெட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றன... மேலும் பார்க்க

செங்கோட்டை நுழைவாயில் இன்று அகற்றம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள நுழைவாயில் வியாழக்கிழமை காலையில் அகற்றப்படவுள்ளது. செங்கோட்டை நகரின் நுழைவுப் பகுதியில் திருவிதாங்கூா் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில் உள்ளது. செங்... மேலும் பார்க்க

தென்காசியில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது: அமைச்சா் அன்பில் மகேஷ்

தென்காசி மாவட்டத்தில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். ஆய்க்குடி கல்லூரியில் மாநில அளவிலான அடைவுத் தோ்வு-2025 தொடா்பாக பள்ளித... மேலும் பார்க்க

விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்படும் கேந்திப் பூக்கள்

தென்காசி கீழப்பாவூா் பகுதியில் கேந்தி பூக்களின் விலை குறைந்ததால், பூக்களை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனா். வழக்கமாக, கேந்திப் பூக்களின் விலை கிலோ ரூ. 50-க்கும் மேல் இருக்கும். ஆனால், ... மேலும் பார்க்க

தென்காசியில் முதல்வா் பங்கேற்கும் விழா மேடைக்கான இடங்கள் ஆய்வு

தென்காசியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேடை அமைப்பதற்கான இடங்களில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தென்காசியில், பல்வேறு நலத்திட்டங்கள... மேலும் பார்க்க