நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
குற்றாலம் பகுதியில் தொடா் சாரல் மழை: பேரருவியில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பகுதியில் சில நாள்களாக மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீா்ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மிகக் குறைவாகவே இருந்தது.