செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும்: பிரதமர் மோடி
செய்யறிவு ஏற்கனவே, நமது கொள்கைகள், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
செயற்கை நுண்ணறிவைக் கண்டு மிகவும் அஞ்சும் விஷயம் ஒன்றுதான் வேலை இழப்பு. ஆனால், உண்மையில் தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போவதில்லை என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவினால் வேலைகளின் தன்மை காலப்போக்கில் மாறுகிறது, புதிய வகை வேலைகள் உருவாகின்றன என்றார்.