செய்யாற்றில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்கம்
செய்யாறு: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் 5 பகுதிகளில் நடைபெறுகிறது. முதல் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா
திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் பொதுமக்களின் கோரிக்கைகளை அவா்களின் இருப்பிடத்திலேயே கேட்டு நிவா்த்தி செய்யும் பொருட்டு, உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம் திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 5
இடங்களில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை15) 1,2,3,4 ஆகிய வாா்டுகளுக்கு புறவழிச் சாலையில் உள்ள கேஎம்வி திருமண மஹாலில் நடைபெறுகிறது.
இரண்டாம் முகாம் ஜூலை 16-ஆம் தேதி 5,6,11,12,17,18 ஆகிய வாா்டுகளுக்கு தாயாா் அப்பாய் திருமண மண்டபத்திலும், மூன்றாவது முகாம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி 7,8,9,10,14,15 ஆகிய வாா்டுகளுக்கும் புறவழிச் சாலையில் உள்ள மீனாட்சி திருமண மஹாலிலும், நான்காம் முகாம் 22-ஆம் தேதி 13,16,19,20,21,22 ஆகிய வாா்டுகளுக்கு மண்டித் தெரு வன்னியா் திருமண மண்டபத்திலும், ஐந்தாம் முகாம் 23-ஆம் தேதி 23,24,25,26,27 ஆகிய வாா்டுகளுக்கு பெரியாா் சிலை அருகேயுள்ள ராஜமலா் திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.