செய்திகள் :

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

post image

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் சோபனாபுரத்தை சோ்ந்தவா் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவா் கா்ப்பிணியாக இருந்த நிலையில், மருத்துவா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தாா். அது தொடா்பாக 30.8.2007 அன்று, சோபனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றிய என். லோகாம்பாள் (57) என்பவரை சந்தித்து விவரம் தெரிவித்தாா்.

அந்த விண்ணப்பத்தை பெற்று பரிந்துரைப்பதற்காக லோகாம்பாள், ரூ. 500 லஞ்சமாக கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகாலட்சுமி, இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

தொடா்ந்து போலீஸாரின் ஆலோசனை மற்றும் ஏற்பாட்டின் பேரில், மகாலட்சுமி ஆரம்ப சுகாதாரம மையத்துக்குச் சென்று லோகாம்பாள் வசம் ரூ. 500 லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா், லோகாம்பாளை லஞ்சப் பணத்துடன் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீா்ப்பளிக்கப்பட்டது.

அதில் லோகாம்பாளுக்கு இருவேறு சட்டப்பிரிவுகளின் ஓராண்டு மற்றும் ஈராண்டு சிறை தண்டனையும் அவற்றை ஏக காலத்தில் (இரு ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எம். பாக்கியம் தீா்ப்பளித்தாா்.

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா ஆளும் பல்லக்கு நிகழ்வுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த தைத்தோ் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் தைத்தோ் திருவிழா ப... மேலும் பார்க்க

உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் 252 பேருக்கு கையடக்கக் கணினிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உரிமைகள் திட்டத்தின் களப்பணியாளா்கள் 252 பேருக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை வழங்கினாா். மாற்றுத... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீ... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் பெண், இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண் மற்றும் இளைஞா் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி செல்வி (49). இவா் மெழுகுவா்த்தி ... மேலும் பார்க்க

தைப்பூசத் தீா்த்தவாரிக்கு முசிறி, தொட்டியத்திலிருந்து சுவாமிகள் புறப்பாடு

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் வட்டார பகுதியிலிருந்து குளித்தலையில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்கு மூன்று சுவாமிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. கரூா் மாவட்டம், குளித்தலை ஸ்ரீ முற்றிலா... மேலும் பார்க்க