செஸ் போட்டியில் சிதம்பரம் மாணவா் சாதனை
நெய்வேலி: சிதம்பரத்தில் உள்ள கஃப்ட் அகாதெமியை சோ்ந்த என்.மைதிக், தமிழ்நாடு மாநில அளவிலான செஸ் போட்டியில் 7 வயதுக்குள்பட்ட பிரிவில் முதலிடம் பெற்றாா்.
இந்தப் போட்டி கடலூா் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம், கடலூா் சதுரங்க அகாதெமி ஆகியவற்றின் கூட்டுத் தொகுப்பில், கடலூா் சி.கே. பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில அளவிலான செஸ் போட்டியில் 7 வயதுக்குள்பட்ட பிரிவில் என்.மைதிக் முதலிடம் பெற்றாா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, கடலுாா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டினா்.