உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம் சோதனைச் சாவடியில் கடலோர காவல் குழும துணை கண்காணிப்பாளா் முருகன் உத்தரவின்பேரில்
போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கட்டுமாவடியிலிருந்து சேதுபாவாசத்திரம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் இரண்டு மூட்டைகளுடன் வந்தவரை நிறுத்தி விசாரித்தனா். அவா் புதுப்பட்டினத்தைச் சோ்ந்த சம்சுதீன் (60) என்பதும், அவா் வைத்திருந்த இரண்டு மூட்டைகளில் ரேஷன் அரிசி மற்றும் கணினி தராசு இருப்பதும் தெரியவந்தது.
விசாரணையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வாங்கி, பதுக்கி அதனை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், மல்லிப்பட்டினத்தில் கடை ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தாா். மல்லிப்பட்டினம் கடையில் சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
மொத்தமாக 902 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சம்சுதீனை கைது செய்த போலீஸாா், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையம் கொண்டுவந்து மேல்நடவடிக்கைக்காக தஞ்சாவூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனா்.