முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்
நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது.
காட்பாடி வனச் சரகம் சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சேனூா் காப்புக் காட்டு பகுதியில் மாபெரும் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, காட்பாடி வனச் சரகா் கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், வனத் துறை அதிகாரிகள், சேனூா் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து சேனூா் காப்புக்காட்டில் கொட்டப்பட்டிருந்த நெகிழி குப்பைகளை அகற்றினா்.
இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியது: வனப்பகுதி, காப்புக் காட்டில் அத்துமீறி மக்கள் நுழையக் கூடாது. விஷமிகள் சிலா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகளை கொட்டுகின்றனா். நெகிழி பொருள்கள் மக்குவதற்கு பல ஆண்டுகளாகும். வனவிலங்குகள் நெகிழி பொருள்களை உண்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது என்றனா்.